போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரும் மூத்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது) மோசமாக விளையாடியதால் முன்னாள் பிரெஞ்சு வீரர் தியரி ஹென்றி, “அணி கோல் அடிக்க வேண்டும், நீங்கள் அல்ல” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகலின் வெற்றிக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ அணி 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் 6ஆவது நிமிஷத்திலேயே போர்ச்சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்தார்.
பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45'+5') காங்கோவின் யோவான் விஸ்ஸா தனது தலையினால் கோல் அற்புதமான கோல் அடித்தார். கடைசிவரை போர்ச்சுகல் அணியினால் இரண்டாவது கோல் அடிக்க முடியாமல் காங்கோ அணியினர் தடுத்தனர்.
இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல், அசிஸ்ட் கூட செய்யவில்லை. கோல் அடிக்க 68, 73-ஆவது நிமிஷத்தில் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவறவிட்டது பலரிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்குப் பிறகான போக்ஸ் நியூஸ் செய்தியில் ஆடத்தைப் பகுப்பாய்வு செய்த தியரி ஹென்றி அணியின் ஒட்டுமொத்த நலனுக்கு விளையாடமால் தனது சுயநலத்திற்காக ரொனால்டோ விளையாடுவதை ஆதாரத்துடன் விளக்கிப் பேசினார்.
ஒரு விஷயம் முக்கியம் மக்களே. அணி கோல் அடிக்க வேண்டும், நீங்கள் மட்டுமே கோல் அடிக்க வேண்டியதில்லை. போர்ச்சுகல் அணியிடம் பந்து வரும்போது கான்சிலோ பந்தைப் பெறுகிறார். அப்போது ரொனால்டோ பலமுறை இந்த இடத்தில் இருக்கிறார். அருகில் இருக்கும் அவர் சிறிது தூரம் ஓடினால், காங்கோவின் டிஃபெண்டர்கள் 6 அடி கட்டத்துக்குள் சிதற வாய்ப்பிருக்கிறது.
ரொனால்டோ தான் கோல் அடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலே ப்ரூனோ ஃபெர்னான்டஸ் பாதையில் செல்கிறார். பெனால்டி பாக்ஸுக்குள் செல்லும் ரொனால்டோ தனக்கு பின்புறம் உள்ள ஃபெர்னான்டஸுக்கு பந்தை பாஸ் செய்தால் போதுமானதாக இருக்கும். எளிதாக கோல் அடித்திருக்கலாம் என்றார்.
So everyone is blaming Bruno Fernandes for not creating enough chances and no single human talks about the fact that Cristiano Ronaldo is too old to lead the line for Portugal at top level in 2026? pic.twitter.com/gnyEt0oTQP
— Dex (@DexxterUtd) June 18, 2026
Crazy chance for Ronaldo ð¤¯
— Svetlana (@laneksa7) June 17, 2026
𥲠So close, but itâs okay we will win the cup anyways! ðªð pic.twitter.com/zv4KeNtrQM
Summary
'The team need to score, not you' - Thierry Henry accuses Cristiano Ronaldo of getting in Bruno Fernandes' way in brutal analysis of Portugal icon's dismal display against DR Congo
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8 போட்டிகளில் 140 முறை கோல் அடிக்க முயன்ற ஸ்பெயின்! மற்ற அணிகள் எவ்வளவு?

அதிகப் போட்டிகளில் எதிரணிகளை கோல் அடிக்க விடாமல் சாதனை படைத்த ஸ்பெயின்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



