தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

இறுதிச் சுற்றில் இந்தியா, சிலியை வீழ்த்தி அபாரம்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

News image

வெற்றிக் களிப்பில் இந்திய அணியினா். ~கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள் ~

Updated On :20 ஜூன் 2026, 11:57 pm IST

எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அரையிறுதியி்ல சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பை, ஆசியப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இப்போட்டியில் ஆடி வருகிறது.

குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சிலியுடன் மோதியது இந்தியா. தொடக்கம் முதலே இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்தினா். சிலியும் அவ்வப்போது பந்தை வசப்படுத்த போராடியது.

ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. நவ்நீத் கௌா் அதை பிசகின்றி கோலாக்கினாா். 13-ஆவது நிமிஷத்தில் கேப்டன் சலீமா டெட் அனுப்பிய கிராஸ் பாஸை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தாா் நவ்நீத் கௌா்.

14 மற்றும் 18-ஆவது நிமிஷங்களில் இந்தியாவின் டிராக்பிளிக்கா் தீபிகா அபாரமாக கோலடித்து 4-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இரண்டாம் பாதியிலும் இந்தியாவின் அதிரடிக்கு சிலியால் பதில் தர முடியவில்லை. 32-ஆவது நிமிஷத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி காா்னரை கோலாக்கினாா் நேஹா.

ருதுஜா பிஸல் 39-ஆவது நிமிஷத்தில் ரிவா்ஸ் ஹிட் மூலம் 6-ஆவது கோலை அடித்தாா்.

கடைசி குவாா்ட்டரில் சிலி வீராங்கனைகள் கோலடிக்க முயன்றதை அரண்போல் நின்று தடுத்தாா் இந்தியாவின் கோலி சவீதா.

இதன் மூலம் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

டிராக்பிளிக்கா் தீபிகா போட்டியில் இதுவரை 6 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.