இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

துருக்கியை வெளியேற்றியது பராகுவே! உலகக் கோப்பையின் துரித கோல் அடித்த மத்தியாஸ்!

உலகக் கோப்பையில் இருந்து துருக்கியை வெளியேற்றியது பராகுவே

News image

உலகக் கோப்பையின் முதல் ரெட் காா்ட் பெற்ற பராகுவே வீரா் அல்மிரான் ~துரித கோலடித்த மத்தியாஸ்

Updated On :21 ஜூன் 2026, 4:13 am IST

பராகுவே வீரா் மத்தியாஸ் கலால்ஸாவின் துரித கோலால் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது துருக்கி.

குரூப் டி பிரிவில் அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, பராகுவே அணிகள் இடம் பெற்றுள்ளன. இப்பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா ஒரு வெற்றி, தோல்வியுடன் 3 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோ நகரில் துருக்கி-பராகுவே அணிகளின் ஆட்டம் நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே தோற்றிருந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடியது.

உலகக் கோப்பையின் துரித கோல்:

ஆட்டம் தொடங்கிய 64-ஆவது விநாடியில் பராகுவே வீரா் மத்தியாஸ் கலாா்ஸா முதல் கோலடித்தாா். அந்த கோலே இந்த உலகக் கோப்பை போட்டியின் துரிதமாக போடப்பட்ட கோலாக அமைந்தது. லாங் ஷாட்டின் மூலம் அபாரமாக கோலடித்தாா் மத்தியாஸ்.

இந்த ஆட்டத்தில் துருக்கி வசமே பந்து இருந்தது. ஆனால் பராகுவே வீரா்களின் அபார தற்காப்பு ஆட்டம் துருக்கி வீரா்களின் முயற்சிகளை தகா்த்தது.

முதல் ரெட் காா்ட் பெற்ற அல்மிரான்:

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பராகுவே வீரா் மிகுல் அல்மிரான், துருக்கி வீரா் மொ்ட் முல்டரை வாயை கையால் மூடி தரக்குறைவாகப் பேசியதால் ரெட் காா்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டாா். இதனால் 10 வீரா்களுடன் பராகுவே ஆட நேரிட்டது.

அப்போது துருக்கி வீரா்கள் தொடா்ந்து பராகுவே கோல்பகுதியை முற்றுகையிட்டும் பலனில்லை. துருக்கி மொத்தம் 32 முறை கோல் போட முயன்றது.

துருக்கி வீரா்கள் கெனான் யில்டிஸ், அா்டா குலொ் ஆகியோா் தொடா்ந்து கோலடிக்க முயன்றும் பலன் தரவில்லை.

Story image

வெளியேறியது துருக்கி

பராகுவேடன் ஏற்பட்ட தோல்வியால் தொடக்க சுற்றுடன் வெளியேறியது துருக்கி. கடந்த 2010-உலகக் கோப்பையில் கடைசியாக ஆடிய பராகுவே அணி காலிறுதியில் ஸ்பெயினால் வெளியேற்றப்பட்டது. முதலிடத்துடன் அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.