உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்!

உலகக் கோப்பையில் வெளியேறிய நான்கு அணிகள் குறித்து...

Jordan's Abdallah Nasib (3) and goalkeeper Yazeed Abulaila (1) react after their loss during the World Cup Group J soccer match between Jordan and Algeria in Santa Clara, Calif., near San Francisco, Monday, June 22, 2026. (AP Photo/Eugene Hoshiko)

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய சோகத்தில் ஜோர்டன் அணியினர். - படம்: ஏபி

Published On :

உலகக் கோப்பை 2026ல் இதுவரை நான்கு அணிகள் வெளியேறியுள்ளன. நான்காவது அணியாக ஜோர்டன் அணி வெளியேறியது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியா - ஜோர்டான் அணிகளுக்கான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில்  2 - 1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜோர்டான் அணியின்  நிசார் அல் ரஷ்தான் முதல் பாதியில் அடித்த கோல் மூலம் அவர்கள் முன்னிலை பெற்றனர். ஆனால், இரண்டாம் பாதியில் அல்ஜீரியாவின் ஆதிக்கத்தை அவர்களால் தடுக்க முடியாமல் போனது.

இரண்டாம் பாதியில், அல்ஜீரியா சார்பில் 69ஆவது நிமிஷத்தில் நாதிர் பென்புவாலி, 82ஆவது நிமிஷத்தில் அமின் குயிரி கோல் அடித்தார்கள்.

இந்தத் தோல்வியுடன், குரூப் ஜேவில் இடம்பெற்றுள்ள ஜோர்டான் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. முன்னதாக, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்) ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.

மொத்தமாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் டாப் 2 அணிகள் (24) அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.

கடைசி இடத்தில் இருக்கும் 12 அணிகள் வெளியேறுகின்றன. பின்னர், மூன்றாமிடத்தில் இருக்கும் டாப் 8 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுகின்றன.

மீதமிருக்கும் 4 அணிகளுமாகச் சேர்த்து மொத்தமாக 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகின்றன.

இதுவரை, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே) ஆகிய நான்கு அணிகள் உலகக் கோப்பையில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளன.

Summary

As of June 23, 2026, four teams have been officially eliminated from the 2026 FIFA World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.