கால்பந்து உலகக் கோப்பையில், தோல்வியிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி கனடா அசத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்துடன் கனடா 1-2 என தோல்வியிற்றது.
கனடா தனது சொந்த மண்ணில் நடந்த லீக் சுற்று போட்டியில் ஸ்விட்சர்லாந்துடன் மோதியது. இந்தப் போட்டியில் முதல் பாதியில் 0-0 என சமநிலை வகித்தது.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், 46ஆவது நிமிஷத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் ரூபன் வர்காஸ் கோல் அடித்தார். பின்னர், 57ஆவது நிமிஷத்தில் ஜோஹன் மன்ஜாம்பி கோல் அடித்து 2-0 என முன்னிலை வகிக்க உதவினார்.
கனடா தனது 76ஆவது நிமிஷத்தில் பிரமோஸ் தாவீது கோல் அடித்து 1-2 என்ற நிலையை உருவாக்கினார். பின்னர், இரண்டாவது கோல் அடிக்க கனடா எவ்வளவு முயன்றும் முடியாமல் போனது.
போட்டியின் 87ஆவது நிமிஷத்தில் கனடா வீரர் லியாம் மில்லருக்கு யெல்லோ கார்டு வழங்கப்பட்டது. இறுதியில் கனடா 1-2 என தோற்றது. இருப்பினும் முதல் போட்டியில் டிரா, இரண்டாவது போட்டியில் வென்றதால் 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தேர்வானது.
குரூப் பி பிரிவில் ஸ்விட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, கனடா 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கோல்கள் வித்தியாசத்தில் போஸ்னியாவை விட முன்னிலை வகித்ததால், கனடா இரண்டாமிடம் பிடித்தது.
Summary
Switzerland winger Manzambi gets a World Cup start and makes the most of it against Canada
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?

ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!

கடைசி நேர பரபரப்பு... டிராவில் முடிந்த கனடா - போஸ்னியா ஆட்டம்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




