தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

டெம்பேலே அடித்த ஹாட்ரிக் கோல்கள்! பிரான்ஸ் அதிரடி வெற்றி!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் - நார்வே அணிகள் மோதிய போட்டி பற்றி...

News image

ஹாட்ரிக் கோல் அடித்த டெம்பேலேவைப் பாராட்டும் எம்பாப்பே - AP

Updated On :27 ஜூன் 2026, 4:56 pm IST

பிரான்ஸ் - நார்வே இடையே நடைபெற்ற போட்டியில் டெம்பேலே அடித்த ஹாட்ரிக் கோல்கள் மூலம் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் - நார்வே அணிகள் மோதிய போட்டி போஸ்டானில் நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதால் புள்ளிப்பட்டியலில் யார் முதலிடம் பெறுவார் என்பது எதிர்பார்ப்பில் இருந்தது.

அதேபோல, நட்சத்திர வீரர்களான கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) மற்றும் எர்லிங் ஹாலண்ட் (நார்வே) ஆகியோர் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

நாக்-அவுட் சுற்று கடுமையாக இருக்கும் என்பதை அறிந்த நார்வே பயிற்சியாளர் ஸ்டாலே சோல்பக்கன், நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் மற்றும் மார்ட்டின் ஓடெகார்ட் ஆகியோரை மாற்று வீரர்களாக ஆட்டத்தில் இறக்காமல் அமரவைத்தார்.

ஆட்டம் தொடங்கி 13-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த பிரான்ஸின் டெம்பேலே, 18-வது நிமிடத்தில் நார்வே வீரர்கள் தடுப்புகளை மீறி அடுத்த கோலை அடித்தார். முதல் பாதி முடிவதற்கு முன்பு 45-வது நிமிடத்தில் தனது 3-வது கோலை அடித்தார் டெம்பேலே. இதன்மூலம், 32 நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு நங்கூரமிட்டார் டெம்பேலே.

நார்வே அணி சற்றே தடுமாறினாலும் 42 -வது நிமிடத்தில் தெலோ ஆஸ்கார்ட் அடித்த கோல் மூலம் தனது கணக்கைத் தொடங்கியது. இரண்டாம் பகுதியில் தீவிரமான ஆட்டத்தை நார்வே வெளிப்படுத்தியது. ஆனால், 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் வீரர் ஜோர்கன் ஸ்ட்ராண்ட் தவறவிட்டார்.

பின்னர், கூடுதல் நேரத்தின் முடிவில் பிரான்ஸின் பிராட்லி பார்கோலா அடித்த பந்தை தலையால் மோதி டெசிரே டூயே கோலாக்கினார். பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

1998-ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் கோப்பை வென்ற பின்னர் முதல்முறையாக ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றது பிரான்ஸ் அணி. இதற்கு, ஓஸ்மானே டெம்பெலெ அடித்த 3 கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது அதிவேக ஹாட்ரிக் கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை டெம்பேலே படைத்தார்.

Summary

France won the match against Norway thanks to a hat-trick scored by Dembélé.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.