முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

‘ஏ’ டிவிஷன் வாலிபால்: அக்னி ஃப்ரெண்ட்ஸ் வெற்றி

சென்னையில் நடைபெறும் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அக்னி ஃப்ரெண்ட்ஸ் 3-1 என்ற செட் கணக்கில் கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:34 am IST

சென்னையில் நடைபெறும் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அக்னி ஃப்ரெண்ட்ஸ் 3-1 என்ற செட் கணக்கில் கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களை 25-17, 27-25 என்ற கணக்கில் வென்று அக்னி ஃப்ரெண்ட்ஸ் முன்னிலை பெற, கஸ்டம்ஸ் அணி 3-ஆவது செட்டை 25-23 என வென்று, மீண்டு வர முனைந்தது.

எனினும் அக்னி ஃப்ரெண்ட்ஸ் அணி 4-ஆவது செட்டை 25-19 என்ற வகையில் கைப்பற்றி, வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணி வீரா் கபாலி ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

புள்ளிகள் பட்டியலில் அக்னி ஃப்ரெண்ட்ஸ் 7 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியுடன் 9 புள்ளிகளோடு 5-ஆவது இடத்தில் உள்ளது. கஸ்டம்ஸ் 6 ஆட்டங்களில் 5 தோல்விகள் உள்பட 4 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் இருக்கிறது. இந்தியன் வங்கி அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

போட்டியின் 14-ஆம் நாளான சனிக்கிழமை, ஐசிஎஃப் - கஸ்டம்ஸ், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி - டிஜி வைஷ்ணவ அணிகள் மோதுகின்றன.