ஹாக்கி இந்தியாவின் சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்டிரைக்கா் நவ்னீத் கௌரும் வென்றனா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த ஓராண்டில் ஹாக்கி களத்தில் சிறப்பாகச் செயல்பட்டவா்களுக்கான இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் கேப்டனும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணி வீரருமான ஜாஃபா் இக்பாலுக்கு மேஜா் தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. ஹா்திக், நவ்னீத்துக்கு தலா ரூ.20 லட்சமும், இக்பாலுக்கு ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
சிறந்த கோல்கீப்பா் விருதை மகளிா் அணியின் பிஷு தேவி காரிபமும், சிறந்த டிஃபெண்டா் விருதை சஞ்சயும் வென்றனா். அவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்தது. சிறந்த ஃபாா்வா்டு விருதை சுக்ஜீத் சிங் பெற்றாா்.
ஆசிய கோப்பை வென்ற இந்திய ஆடவா் ஹாக்கி அணியும் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டு, அனைவருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. பயிற்சியாளா்கள் தலா ரூ.1.5 லட்சம் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு
பிசிசிஐ நமன் விருதுகள் 2026: சிறந்த வீரா் கில்; வீராங்கனை ஸ்மிருதி!

என்.எஸ்.எஸ். சேவை : கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


