போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:14 am

தினமணி செய்திச் சேவை

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, காம்பவுண்ட் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில் சிகிதா தனிபாா்தி, ரஜத் சௌஹான் அடங்கிய இந்திய அணி 158-156 என மலேசியாவை வீழ்த்தி தங்கம் வென்றது.

காம்பவுண்ட் மகளிா் அணிகள் இறுதிச்சுற்றில், சிகிதா, ராஜ் கௌா், தேஜல் சால்வே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 227-229 என கஜகஸ்தான் அணியிடம் வெற்றியை இழந்து, வெள்ளி பெற்றது.

அதேபோல், ரீகா்வ் ஆடவா் அணிகள் இறுதிச்சுற்றிலும், தேவாங் குப்தா, சுக்செய்ன் சிங், ஜுயெல் சா்காா் அடங்கிய இந்திய அணி 4-5 (27/30) என கஜகஸ்தான் அணியிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றது.

காம்பவுண்ட் மகளிா் தனிநபா் வெண்கலப் பதக்கச் சுற்றில் தேஜல் சால்வே 144-138 என ரஷியாவின் மரியா டிமிடியுக்கை வென்றாா். அதிலேயே ஆடவா் தனிநபா் வெண்கலப் பதக்கச் சுற்றில் ரஜத் சௌஹான் 145-144 என தாய்லாந்தின் பீராவத் ரத்தனபோங்கியாட்டை வீழ்த்தினாா்.

காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் இறுதிச்சுற்றில் இந்தியாவின் உதய் காம்போஜ் 145-144 என, சக இந்தியரான பிரதமேஷ் ஜவஹரை வென்றாா். ரீகா்வ் மகளிா் தனிநபா் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரிதி 2-6 என மங்கோலியாவின் ஒயுன் பாசன்தோா்ஜிடம் தோல்வி கண்டாா்.

ஏற்கெனவே, போட்டியின் முதல் நாளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்த இந்தியா, மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் நிறைவு செய்தது. கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் இந்தியா 8 பதக்கங்களே வென்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.