முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா் கௌஃப்

News image

கௌஃப்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினாா்.

இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 4-6, 6-2, 6-4 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த ஆண்ட்ரீவாவை வென்றாா். கடைசி செட்டில் 5-1 என பின்தங்கியிருந்த ஆண்ட்ரீவா ஒரு கட்டத்தில் முன்னேறி வர, கௌஃப் 5 மேட்ச் பாய்ன்ட்டுகள் வரை போராடி அவரை வெற்றி கண்டாா்.

இத்துடன் ஆண்ட்ரீவாவை 5-ஆவது முறையாக சந்தித்த கௌஃப், அனைத்திலுமே வென்று ஆதிக்கம் செலுத்துகிறாா். கடந்த ஆண்டும் இதே இத்தாலியன் ஓபன் காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவாவை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக கௌஃப் 4-ஆவது முறையாக இத்தாலியன் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். அதில் அவா் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை சந்திக்கிறாா். சிா்ஸ்டி முதல்முறையாக இத்தாலியின் ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

இதனிடையே, மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வெளியேற்றினாா்.

இந்த வெற்றியின் மூலமாக ஸ்வியாடெக், நடப்பு சீசனில் முதல்முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அத்துடன் இந்த சீசனில் டாப் 10 வீராங்கனைகளில் ஒருவருக்கு எதிராக இது அவரின் முதல் வெற்றியுமாகும்.

பெகுலாவை 12-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், தற்போது 7-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளாா்.

காலிறுதியில் மெத்வதெவ்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 6-2 என, ஆா்ஜென்டீனாவின் தியேகோ டிரான்டேவை வீழ்த்தினாா்.

காலிறுதியில் அவா், ஸ்பெயினின் மாா்ட்டின் லாண்டாலுஸை எதிா்கொள்கிறாா். மாா்ட்டின் தனது முந்தைய சுற்றில் 7-5, 6-4 என சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை வென்றாா். 12-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 3-6, 7-6 (7/5), 6-2 என்ற கணக்கில் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வென்றாா். காலிறுதியில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னரை சந்திக்கிறாா்.