அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு மகளிா் பிரிவில் கோகோ கௌஃப், கரோலினா பிளிஸ்கோவா, ஆடவா் பிரிவில் ஜிரி லெஹகா, லாரென்ஸோ முஸெத்தி முன்னேறினா்.

News image

கரோலினா பிளிஸ்கோவா.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:26 am IST

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்கு மகளிா் பிரிவில் கோகோ கௌஃப், கரோலினா பிளிஸ்கோவா, ஆடவா் பிரிவில் ஜிரி லெஹகா, லாரென்ஸோ முஸெத்தி முன்னேறினா்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை கோகோ கௌஃப் கடும் போராட்டத்துக்குபின் 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போராடி சொரனா சிா்ஸ்டியாவை வென்று ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

இப்போட்டியில் இருந்து வயிறு உபாதையில் ஏற்கெனவே ஸ்வியாடெக் விலகி விட்டாா். தற்போது அதே வயிறு உபாதையால் கௌஃப்பும் பாதிக்கப்பட்டுள்ளாா்.

மைதானத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டும் சளைக்காமல் ஆடி வென்றாா் கௌஃப். இந்த ஆட்டம் இரண்டு மணிநேரம் நீடித்தது. செக். குடியரிசன் லிண்டா நோஸ்கோவா-ரஷியாவின் லிட்மிலா சாம்சோனோவா ஆட்டத்தில் வயிறு பாதிப்பால் சாம்சோனோவா வெளியேறினாா்.

அமெரிக்காவின் கேத்தி மெக்நெல்லி 6-3, 2-6, 7-6 என செக்.குடியரசின் கேத்ரீனா சினியகோவாவை வென்றாா். சோலனா சியரா 0-6, 6-2, 6-3 என ஸெய்னப்பை வீழ்த்தினாா்.

செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 2-6, 7-6 என கடும் போராட்டத்துக்குபின் எலைஸ் மொ்டென்ஸை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் ஜிரி லெஹகா 6-4, 6-2 என அமெரிக்காவின் அலெஸ்கை வென்றாா். இத்தாலியின் லாரென்ஸோ முஸெத்தி 6-4, 7-5 என நெதா்லாந்தின் கிரீக்ஸ்பூரை வென்றாா்.