திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

14-ஆவது முறையாக லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி..! தொடர்ச்சியாக 5 முறை வென்று ஆதிக்கம்!

லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி கால்பந்து அணி குறித்து...

News image

லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி. - படங்கள்: எக்ஸ் / பாரீஸ் செயின்ட் ஜெர்மன்.

Updated On :48 நிமிடங்கள் முன்பு

பிரான்ஸில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற, உயர்தரமான லீக் 1 கால்பந்து தொடரில் அதிகமான புள்ளிகளைப் பெற்று கோப்பையை பிஎஸ்ஜி அணி மீண்டும் தக்கவைத்தது.

தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ள பிஎஸ்ஜி அணி, மொத்தமாக 14ஆவது முறையாக வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லீக் 1 தொடரின் முக்கியமான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலிடத்தில் இருந்த பிஎஸ்ஜி அணியும் இரண்டாவது இடத்தில் இருந்த லென்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-0 என வென்று கோப்பையை உறுதிசெய்தது. இதில் கவரேட்ஸ்கேலியா, இஃப்ரஹிம் கோல் அடித்தார்கள். போட்டியில் 62 சதவிகித பந்தை பிஎஸ்ஜி அணியினரே தக்கவைத்துக்கொண்டனர்.

ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 34 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 33ஆவது போட்டியில்தான் கோப்பை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்ஜி அணி இந்த சீசனில் ஏற்கெனவே பிரெஞ்சு சூப்பர் கோப்பை, லீக் 1 வென்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதிலும் வென்றால் இந்த சீசனில் மூன்று சாம்பியன்களாகும் வாய்ப்பு இருக்கிறது.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி மே.30ஆம் தேதி புடாபெஸ்டில் நடைபெற இருக்கிறது. ஆர்செனல் உடன் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி மோதுகிறது.

Summary

PSG beat Lens to clinch 5th straight and 14th in Ligue 1 title

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.