12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சௌதி புரோ லீக்: முதல்முறையாக கோப்பை வென்ற ரொனால்டோ!

சௌதி புரோ லீக்கில் முதல்முறையாக கோப்பை வென்ற ரொனால்டோ குறித்து...

Nassr's Portuguese forward #07 Cristiano Ronaldo poses with the trophy after winning the Saudi Pro League title at the end of the football match against Damac at the Al-Awwal Park Stadium in Riyadh on May 21, 2026. (Photo by Fayez NURELDINE / AFP)

சௌதி புரோ லீக் கோப்பையுடன் ரொனால்டோ. - படம்: ஏஎஃப்பி

Published On :

சௌதி புரோ லீக்கில் முதல்முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோப்பை வென்று அசத்தியுள்ளார். கடந்த 2023ல் அல் நாசர் அணியில் இணைந்த ரொனால்டோ முதல்முறையாக இந்தக் கோப்பையை ஏந்துகிறார்.

அல் நாசர் அணிக்கு இது 11ஆவது கோப்பையாக இருந்தாலும் ரொனால்டோ வந்த பிறகு முதல்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல் நாசர் அணி டாமிச் உடன் மோதிய லீக்கின் கடைசி போட்டியில் 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 62, 80ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலமாக அல் நாசர் அணி 86 புள்ளிகள் கிடைத்துள்ளன. அல் ஹிலால் 84 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளன.

கடந்த வாரத்தில் உள்ளூர் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற அல் நாசர் அணி தவறவிட்டது. அப்போதும் ரொனால்டோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோப்பையை வென்ற பிறகு ரொனால்டோ கொடுத்த ரியாக்‌ஷன் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்துடன் 34ஆவது கோப்பையை ரொனால்டோ வென்றுள்ளார்.

இந்த கிளப்பில் ரொனால்டோ 100 கோல்கள் அடித்துள்ளார். மொத்தமாக தனது சீனியர் கால்பந்து வாழ்க்கையில் 973 கோல்களை நிறைவு செய்துள்ளார்.

Summary

Cristiano Ronaldo wins first Saudi title as Al Nassr clinch league

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.