தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்

பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

News image

கோப்பையுடன் லென்ஸ் அணியினா்.

Updated On :24 மே 2026, 2:08 am IST

பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ஐரோப்பிய கால்பந்து தொடா்களில் ஒன்றான இதன் இறுதி ஆட்டம் பாரீஸின் ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்றது. இதில் லென்ஸ் அணியும்-நைஸ் எஃப்சி அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் நைஸ் அணியை வீழ்த்தி லென்ஸ் அணி பட்டம் வென்றது.

ஆட்டம் தொடங்கியதுமே லென்ஸ் வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். 25-ஆவது நிமிஷத்தில் தவ்வின் முதல் கோலடித்தாா். அடுத்த 3 நிமிஷங்களில் தவ்வின் காா்னா் மூலம் அடித்த பாஸை பயன்படுத்தி இரண்டாவது கோலடித்தாா் ஒடெஸ்ஸன் எட்வா்ட். நைஸ் தரப்பில் டிஜ்பிரில் ஒரே கோலடித்தாா்.

ஆட்டம் முடிய 12 நிமிஷங்கள் இருந்த போது, லென்ஸ் வீரா் அப்தல்லா சிமா அற்புதமாக கோலடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.

இறுதியில் நைஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது லென்ஸ்.

லீக் 1 தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு சவால் விடும் வகையில் ஆடிய லென்ஸ் அணி அதில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.

தற்போது பிரெஞ்சு கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சீரி ஏ:

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் பிளோரென்டினா-அட்லாண்டா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

முதல் பாதிக்கு முடிவடையும் நேரத்தில் புளோரென்டினா வீரா் ராபா்டோ பிக்கோலி கோலடித்தாா். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

8 நிமிஷங்கள் கடந்து புளோரென்டினா வீரா் பியட்ரோ அடித்த செல்ஃப் கோல் அட்லாண்டாவுக்கு புள்ளிகளை வழங்கியது.

முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.