இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

2-ஆவது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :27 மே 2026, 5:28 am IST

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில், பி.வி.சிந்து 21-17, 21-18 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனியை 44 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினாா்.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்/சிராக் இணை 26-28, 21-15, 21-13 என்ற கேம்களில், மலேசியாவின் சென் ஸி யி/பிரெஸ்லி ஸ்மித் கூட்டணியை 1 மணிநேரம், 15 நிமிஷங்களில் வென்றது.

எனினும் இதர இந்தியா்கள் தங்கள் பிரிவில் தோல்வியுற்றனா். மகளிா் ஒற்றையரில் உன்னதி ஹூடா 14-21, 10-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் டொமொகா மியாஸாகியிடம் தோல்வியுற்றாா். ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-11, 14-21, 12-21 என, கனடாவின் விக்டா் லாயிடம் போராடித் தோற்றாா்.

மகளிா் இரட்டையரில், அஷ்வினி பாட்/ஷிகா கௌதம் இணை 16-21, 11-21 என்ற கேம்களில், சீன தைபேவின் சாங் சிங் ஹுய்/யாங் சிங் டுன் கூட்டணியிடம் வெற்றியை இழந்தது. கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி ஜோடி 21-18, 13-21, 5-21 என்ற கணக்கில், ஸ்பெயினின் பௌலா லோபஸ்/லூசியா ரோட்ரிகெஸ் இணையிடம் போராடி வீழ்ந்தது.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணி 15-21, 13-21 என்ற கேம்களில், 7-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி இணையிடம் தோல்வியுற்றது.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 18-21, 20-22 என்ற கேம்களில், சீன தைபேவின் யாங் போ ஹுசவான்/ஹு லிங் ஃபாங் கூட்டணியிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.