ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

காற்றில் அசைந்த மெஸ்ஸி சிலை..! கயிறுகளால் கட்டப்பட்டது!

கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருக்கும் மெஸ்ஸியின் சிலை குறித்து...

Statue of Lionel Messi tied with ropes for stability amid rain and thunderstorms, in Kolkata on Wednesday. (ANI Photo)

கயிறுகளால் கட்டப்பட்ட மெஸ்ஸி சிலை. - படம்: ஏஎன்ஐ

Published On :

கொல்கத்தாவில் கடந்த டிசம்பரில் மெஸ்ஸி வருகையின்போது அவரது நினைவுச் சின்னமாக 70 அடி உயர சிலை திறக்கப்பட்டது.

தற்போது அந்த சிலை காற்றில் அசைந்ததால், பொது மக்களின் பாதுக்காப்புக்காக நான்கு பக்கமும் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வந்த லியோனல் மெஸ்ஸி கொல்கத்தாவுக்கு வந்தபோது இந்தச் சிலையை திறந்து வந்தார். இந்தச் சிலை பாதுகாப்பில்லாமல் காற்றில் அசைவதால் மக்களிடம் இருந்து புகார் அளிக்கப்பட்டது.

கயிறுகளால் கட்டப்பட்ட மெஸ்ஸி சிலை.

கயிறுகளால் கட்டப்பட்ட மெஸ்ஸி சிலை. - ANI

தற்போதைக்கு கயிறுகளால் கட்டப்பட்டுள்ளது. விரைவில் வேறு இடத்துக்கு மாற்றுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஷராவாத் முகர்ஜி கூறியிருப்பதாவது:

ஆர்ஜென்டீன கால்பந்து லெஜென்ட் மெஸ்ஸியின் சிலை பாதுகாப்பில்லாமல் இருக்கிறது. அது காற்றில் ஆடுவதை நாங்கள் பார்வையிட்டோம். விரைவில் அந்தச் சிலையை இடம் மாற்றுவோம் என்றார்.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி நைலான் கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வராமல் தடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 27 நாள்களில் இடம் மாற்றப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெஸ்ஸி சால்ட் லேக் திடலுக்கு வந்திருந்தபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் அவர் விரைவில் வெளியேற, பின்னர் கூட்டம் திடலை நாசம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

India's 'unsafe' 70ft Messi statue to be moved

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.