சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது

பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வென்றதால், பிரான்ஸில் வெடித்த வன்முறை குறித்து...

Police try to disperses PSG supporters who left off fireworks as they celebrate in Paris, Saturday, May 30, 2026 after the Champions League final soccer match between Paris Saint-Germain and Arsenal that was played in Budapest, PSG won the game. (AP Photo/Thomas Padilla)

பிஎஸ்ஜி அணியின் ஆதரவாளர்களைக் கலைத்த காவல்துறையினர். - ஏபி.

Published On :

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் வெடித்தது.

ஹங்கேரியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பிரான்ஸ் நாட்டில் நடந்த வன்முறையில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஎஸ்ஜி அணியினரின் கொண்டாட்டம்.

பிஎஸ்ஜி அணியினரின் கொண்டாட்டம். - Thomas Padilla

இந்தக் கொண்டாட்டத்தில் நெருப்பு பற்றவைக்கப்பட்ட வாகனங்களால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 காவல்துறையினர் காயமடைந்ததும் கவனிக்கத்தக்கது.

போட்டிக்கு முன்னதாகவே, காவல்துறையினருக்கும் ரசிகர்களும் மோதல் ஏற்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் 6 வாகனங்கள், 2 பேருந்து, 2 தற்காலிக வணிக கட்டமைப்புகள் சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸில் மட்டுமே 280 பேர் கைதாகியுள்ளார்கள். கடந்த சீசனில் நடந்த கொண்டாட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட இருவர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Four Hundreds arrested in France after wild Champions League celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.