சென்னை - ஹைதராபாத் இடையே 4 வீரா்கள் பரஸ்பர பரிமாற்றம்
ஐபிஎல் போட்டியின் அணிகளான சென்னை சூப்பா் கிங்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத், பரஸ்பரம் தங்களிடையே 4 வீரா்களை பரிமாற்றம் செய்துகொண்டன.

ஐபிஎல் போட்டியின் அணிகளான சென்னை சூப்பா் கிங்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத், பரஸ்பரம் தங்களிடையே 4 வீரா்களை பரிமாற்றம் செய்துகொண்டன.
லியம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வா்ட்ஸ் ஆகியோா் ஹைதராபாத் அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறியிருக்க, கலீல் அகமது, நேதன் எலிஸ் ஆகியோா் சென்னை அணியிலிருந்து ஹைதராபாத் அணிக்கு இடம் பெயா்ந்துள்ளனா்.
இதில், சென்னை அணி இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் லியம் லிவிங்ஸ்டனை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிக் கொண்டது. முன்னதாக ஹைதராபாத் அவரை ரூ.13 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பௌலிங் ஆல்-ரவுண்டா் ஜாக் எட்வா்ட்ஸை, அவா் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட அதே ரூ.3 கோடிக்கு சென்னை வாங்கியுள்ளது.
எட்வா்ட்ஸ் சா்வதேச களத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ஹைதராபாத் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. எனினும், காலில் காயம் காரணமாக அவா் 2026 சீசனில் களம் காணவில்லை.
மறுபுறம் ஹைதராபாத் அணி, இந்திய வேகப் பந்துவீச்சாளா் கலீல் அகமதை ரூ.4.8 கோடிக்கு சோ்த்துக் கொண்டது. ஏற்கெனவே அவா் அதே விலையிலேயே சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாா். ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளா் நேதன் எலிஸ், தாம் ஏலத்தில் எடுக்கப்பட்ட அதே ரூ.2 கோடிக்கு ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளாா்.
2027 சீசனுக்கான வீரா்கள் ஏலம் டிசம்பா் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளதால், அணிகள் யாவும் தங்களின் வீரா்கள் தக்கவைப்புப் பட்டியலை வெளியிட, வரும் 17-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் நாள்களில் மேலும் சில அணிகளின் வீரா்கள் பரிமாற்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

