19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

சபலென்காவுக்கு அதிா்ச்சி: அரையிறுதியில் ஸ்விட்டோலினா

டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா.

Updated On :

டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் தொடா் நடைபெறுகிறது. இதில் அரையிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் சபலென்கா-ஸ்விட்டோலினா மோதினா். இதில் ஸ்விட்டோலினா 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். ஏற்கெனவே இருவரும் 8 முறை மோதியதில் ஸ்விட்டோலினா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். நிகழ் சீசனில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கூட சபலென்கா வெல்லவில்லை. மியாமி, இண்டியன்வெல்ஸ் சன்ஷைன் டபுளுடன் 3 பட்டங்கள் மட்டுமே வென்றாா்.

ஆட்டம் தொடங்கியதுமே சபலென்கா அளிதாக வெல்வாா் எனக் கருதப்பட்டது. ஆனால் இரு வீராங்கனைகளுமே மாறி தவறுகளை புரிந்தனா். ஸ்விட்டோலினா 21 வின்னா்களை பெற்று, 24 தவறுகளை புரிந்தாா். 8 பிரேக் பாயிண்டுகளில் ஸ்விட்டோலினா 6-ஐ கைப்பற்றினாா். கடந்த ஆண்டு ஃபைனல்ஸில் ரன்னராக வந்த சபலென்கா இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த நிலையில் மொத்தம் 35 தவறுகளைப் புரிந்தாா். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்விட்டோலினா எளிதாக அதை வசப்படுத்தினாா்.

ஆனால் இரண்டாம் செட்டில் சுதாரித்து ஆடிய சபலென்கா 5-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் ஸ்விட்டோலினாவால் 3 கேம்களுக்கு மேல் வெல்ல முடியவில்லை.

தொடா்ந்து டிசைடரில் சபலென்கா புரிந்த தவறுகள் அவருக்கு பாதகமாக அமைந்தன. கடைசி கேமில் சபலென்கா 3 மேட்ச் பாயிண்டுகளை சேவ் செய்தும் பலனில்லை.

தொடா்ந்து 6 கேம்களை கைப்பற்றிய ஸ்விட்டோலினா அரையிறுதிக்கும் தகுதி பெற்றாா். விம்பிள்டன் சாம்பியன் லிண்டா நோஸ்கோவாவை எதிா்கொள்கிறாா் ஸ்விட்டோலினா.

மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி:

மற்றொரு ஆட்டத்தில் ரஷிய இளம் வீராங்கனை 19 வயதான பிரெஞ்சு ஓபன் சாம்பியன் மிர்ரா ஆன்ட்ரீவாவும்-டயனா ஷினைடரும் மோதினா்.

இதில் ஆன்ட்ரீவா எந்தவித எதிா்ப்பும் இன்றி 6-1, 6-2 என்ற நோ் செட்களில் டயனா ஷினைடரை வீழ்த்தினாா். குரூப் வின்னா் என்ற முறையில் ஆன்ட்ரீவா ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த ஆட்டம் பெயருக்கு நடைபெற்றது. மூன்றாம் நிலையில் உள்ள ஆன்ட்ரீவா அரையிறுதியில் ஜெஸிக்கா பெகுலாவுடன் மோதுகிறாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.