உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவு: அமித் ஷா இரங்கல் வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

ஹாங்காங் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய லக்‌ஷயா சென், சாத்விக் - சிராக்!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியர்கள் குறித்து...

Lakshya Sen, Satwik-Chirag

லக்‌ஷயா சென், சாத்விக் - சிராக் - படங்கள்: எக்ஸ் / பிஏஐ மீடியா

Updated On :

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியர்கள் மூவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென்னும் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் இணைந்து முன்னேறியுள்ளார்கள்

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் நவ.17 முதல் 22 வரை நடைபெற இருக்கின்றன. இதில் காலிறுதிக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சிங்கப்பூரின் கே.ஒய். லோஹா உடன் மோதினார். இந்தப் போட்டியில் லக்‌ஷ்யா சென் 21-17, 21-10, 21-13 ஆகிய கேம்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியரகள் சாத்விக் - சிராக் கூட்டணி சீனாவின் ஹூ கியூடன் - லின் சியாங்கி உடன் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய இணையினர் 21-12, 13-21, 21-16 என்ற கேம்களில் வென்றார்கள். அரையிறுதியில் மலேசிய வீரர்களுடன் மோதவிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜப்பான் மாஸ்டர்ஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் லக்‌ஷயா சென் பட்டம் வென்றிருந்தார். ஹாங்காங் ஓபனிலும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Lakshya Sen, Satwik-Chirag enter semifinals of Hong Kong Open

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.