மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் சாம்பியன்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் சாம்பியன்

Updated On :

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

2026 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி (Women's Asian Champions Trophy) தொடர், மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நவம்பர் 19 முதல் 28, 2026 வரை நடைபெற்றது.

இத்தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து என 6 ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதியில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா கோப்பையை வென்றுள்ளது. அதேநேரம், இது இந்தியாவின் 4-வது ஆசிய சாம்பியன் கோப்பையாகும்.

இதன்மூலம், ஆசிய சாம்பியன் கோப்பைத் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

இத்தொடரில், இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகா சிறப்பாக விளையாடி மொத்தமாக 12 கோல்கள் அடித்துச் சாதனைப் படைத்தார்.

Summary

Asian Champions Trophy Hockey: Indian women's team are champions for the third time in a row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.