ஆசிய சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த ஈஸ்ட் பெங்காலுக்கு மோகன் பகான் சாபம் நீங்குமா?
ஐஎஸ்எல் தொடரில் மோதவிருக்கும் கொல்கத்தாவின் டெர்பி அணிகளான ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் குறித்து...

மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகள் - படங்கள்: எக்ஸ் / மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால்
இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்துத் தொடரில் மோதவிருக்கும் கொல்கத்தாவின் டெர்பி அணிகளான ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் வரலாறு படைத்த ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் தனது எதிரி அணியான மோகன் பகான் உடன் நாளை (நவ.29) மாலை 7.30 மணிக்கு மோதவிருக்கிறது.
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் மோகன் பகான் அணி ஐந்து வெற்றிகளைக் குவித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
நடப்பு சாம்பியனான ஈஸ்ட் பெங்கால் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் ஏஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில்2024 மாற்றப்பட்ட விதிகளுக்குப் பிறகு இரண்டு வெற்றிகளைப் பெற்ற முதல் இந்திய அணியாக வரலாறு படைத்துள்ளது.
ஐஎஸ்எல் தொடரிலும் தனது தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் ஐஎஸ்எல் தொடரில் இதுவரை மோகன் பகான் அணியை வீழ்த்தாமல் இருக்கும் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஈஸ்ட் பெங்கால் அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக கோல்கீப்பர் புர்பா லாச்சென்பா 8 கோல்களைத் தடுத்து அசத்தினார்.
முதலிரண்டு வெற்றியைப் பெற்றிருந்த ஈஸ்ட் பெங்கால் அணியை சென்னையின் எஃப்சி 5-3 என வீழ்த்தி அதன் தன்னம்பிக்கையை உடைத்தது.
இரண்டு அணிகள் மோதிய 11 ஐஎஸ்எல் போட்டிகளில் மோகன் பகான் 9 வெற்றிகள், தோல்வியின்றி 2 சமனிலும் முடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளன. தற்போது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இருந்த ஃபார்மை ஈஸ்ட் பெங்கால் மீண்டும் கொண்டு வருமா என அதன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Ready to continue this #MGISL dominance ð¥¶ðâ¥ï¸#MBSG #JoyMohunBagan #à¦à¦®à¦°à¦¾à¦¸à¦¬à§à¦à¦®à§à¦°à§à¦¨ pic.twitter.com/ZppFpoKRug
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 26, 2026
Fasten your seatbelts! The #KolkataDerby is just 1ï¸â£ day away! ð´ð¡ âï¸ ð¢ð´
— East Bengal FC (@eastbengal_fc) November 28, 2026
ð MBSG
ðï¸ 29 November, Sunday
â° 7:30 PM
ðï¸ Get your ð -ð§ð¶ð°ð¸ð²ðð on District ð https://t.co/wAYR3vptEi
ðº Live on YouTube, Sony LIV & Sony Sports Network #JoyEastBengal #MGISL13 #EBFCMBSG pic.twitter.com/Da07DMSN7S
Summary
Buoyant East Bengal seek ISL breakthrough against in-form Mohun Bagan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


