
சீன ஓபனில் சபலென்கா படுதோல்வி..! 5 ஆண்டுகளாகத் தொடரும் சோகம்!
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற்ற சபலென்கா குறித்து...

தோல்வியடைந்த அரினா சபலென்கா - படம்: ஏபி
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் அரினா சபலென்கா நேர் செட்களில் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த செப்.28 முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் அக்.11 வரை நடைபெற இருக்கின்றன.
உலகின் நம்.2 வீராங்கனையும் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் செக் குடியரசின் நிக்கோலா பார்டுன்கோவா உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் நிக்கோலா பார்டுன்கோவா 6-4, 6-3 என நேர் செட்களில் ஆதிக்க செலுத்தி வென்றார். நிக்கோலா பார்டுன்கோவா டென்னிஸ் தரவரிசையில் 26ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீன ஒபனில் 28 வயதான அரினா சபலென்கா இதுவரை காலிறுதியை தாண்டியதில்லை. தொடர்ச்சியாக ஐந்தாண்டுகளாக இந்த சோகம் தொடர்கிறது என்பதும் நினைவுகூரத்தக்கது.
முன்னதாக உலகின் நம்.1 வீராங்கனை எலானா ரைபாகினா தோல்வியுற்று வெளியேறியதும் கவனிக்கத்தக்கது. ஆடவர் பிரிவில் ஜோகோவிச் - ஸ்வெரெவ் காலிறுதியில் மோதவிருக்கிறார்கள்.
Bartunkova d. Aryna Sabalenka 6-4 6-3 in Beijing
— The Tennis Letter (@TheTennisLetter) October 4, 2026
World #2 is out
Nikola gets the best win of her life
Itâs hard to believe sheâs only 20 years old by the way she plays tennisâ¦what a beautiful all-court game
â2nd WTA 1000 R16
â2nd top 10 win
Czech talent is sizzling
ð¨ð¿â¤ï¸ pic.twitter.com/kXIT9muQDY
Summary
Sabalenka knocked out of China Open in straight sets by Nikola Bartunkova
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






