இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

34-0: உலக சாதனையுடன் 7ஆவது சீன ஓபன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

சீன ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் குறித்து...

Novak Djokovic record-themed posters

நோவக் ஜோகோவிச் சாதனை போஸ்டர்கள் - படங்கள்: எக்ஸ் / டென்னிஸ் டிவி

Published On :

சீன ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். தனது 39ஆவது வயதில் ஏழாவது சீன ஓபனை வென்றுள்ளார்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் செப்.28 முதல் தொடங்கி அக்.11 வரை நடைபெற இருக்கின்றன. இதில் ஆடவருக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் 7-6 (7-3) என முதல் செட்டில் ஜோகோவிச் வென்றார். இரண்டாவது செட்டில் அலெக்ஸ் டி மினார் 1-0 என முதல் கேமில் முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக அவர் வெளியேறினார்.

இந்தக் காரணத்தினால் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ஏழாவது சீன ஓபன் பட்டமாகும். மொத்தமாக இது அவரது 102ஆவது பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன ஓபனில் ஜோவிச் 2009, 2010, 2012, 2013, 2014, 2015, மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் வென்று அசத்தியுள்ளார். மேலும் 34 போட்டிகளில் தோல்வியே காணாமல் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரஃபேல் நடால் 31-0 என வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

  • 2009–2010: முதல் பத்து போட்டிகளில் வென்று 10-0 என தொடர்ச்சியாக இரு முறை பட்டங்களை வென்றார்.

  • 2012–2015: தொடர்ச்சியாக நான்கு பட்டங்களை வென்று 29-0 என அசத்தினார்.

  • 2026 ரீ-என்ட்ரி : 11 ஆண்டுகளுக்குப் பிறகு சீன ஓபனில் பங்கேற்ற ஜோகோவிச் தொடர்ச்சியாக வென்று 34-0 என சாதனை படைத்துள்ளார்.

Summary

Novak Djokovic won his seventh China Open title after defeating Alex de Minaur in the final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.