மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

ஜப்பான் ஓபனில் அல்கராஸ் மீண்டும் சாம்பியன்..! மொத்தமாக 27 பட்டங்கள்!

ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் குறித்து...

Spain's Carlos Alcaraz poses with the trophy after winning the men's singles final against Czechia's Jiri Lehecka at the Japan Open tennis tournament in Tokyo, Tuesday, Oct. 6, 2026. (AP Photo/Eugene Hoshiko)

ஜப்பான் ஓபனில் கோப்பை வென்ற கார்லோஸ் அல்கராஸ் - படம்: ஏபி

Published On :

ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்கவைத்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு விளையாட வந்த அல்கராஸ் சாம்பியன் படத்துடன் முடித்துள்ளார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் செப்.28 முதல் தொடங்கி அக்.6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்டின் கிராஜிசெக் - நிக்கோலா மெக்டிச் வென்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் - செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் அல்கராஸ் 7-6 (4), 6-4 என நேர் செட்களில் வென்று அசத்தினார். ஜப்பான் ஓபனில் படத்தை தக்கவைத்துள்ளார். இதற்காகவே அவர் சீன ஓபனில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் யுஎஸ் ஓபனில் வெற்றியைப் பெற முடியவில்லை. தற்போது நான்கரை மாதத்திற்குப் பிறகு சாம்பியனாகியுள்ளார்.

தோஹா, கத்தாரைத் தொடர்ந்து அல்கராஸுக்கு இந்தாண்டில் இது மூன்றாவது கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஆஸி. ஓபனில் சாம்பியனாகி ஏழு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை, மொத்தமாக அல்கராஸ் 27 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

Summary

Carlos Alcaraz retains Japan Open title in big step following injury layoff

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.