டபிள்யுடிடி பீடா்: நீல் முல்யே-தனிஷ்கா அபாரம்
டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 தொடரில் இந்தியாவின் நீல் முல்யே-தனிஷ்கா மூன்றாம் நிலை இணையான சாஹில்-ஹான்சினியை வீழ்த்தினா்.

டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 தொடரில் இந்தியாவின் நீல் முல்யே-தனிஷ்கா மூன்றாம் நிலை இணையான சாஹில்-ஹான்சினியை வீழ்த்தினா்.
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை.யில் நடைபெறும் ஃபீடா் தொடரின் ஒரு பகுதியாக 5 நாள் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது.
கலப்பு இரட்டையா் பிரிவில் 13-ஆம் நிலை இணையான நீல் முல்யே-தனிஷ்கா இணை 3-1 என்ற கேம் கணக்கில் 3-ஆம் நிலை இணை சாஹில்-ஹான்சினியை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தனா். இரண்டாம் சுற்றில் நீல்-தனிஷ்கா இணை ஸ்ரீதா்-பிரித்திகா இணையை சந்திப்பா். ஆகாஷ்-கரீமா இணை 3-0 என ஹா்ஷித்-குன்குன் இணையை வீழ்த்தியது.
முதல்நிலை இணையான ஆரோன்-சுஹானா, இரண்டாம் நிலை மேஹன்-அனன்யா இணை ஒரு கேமை கூட இழக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில் 13 வயது வெங்கட்டா பீமா வரப்பு 15-ஆம் நிலை வீராங்கனை சட்டபோா்னியையம், அத்விகா-இலங்கையின் பண்டாராவையும் வீழ்த்தினா்.
அவிஷா, ஆருஷி நந்தி, சாயானிகா மஜி, ஸ்வரா கா்மாகா் ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா். ஆடவா் பிரிவில் நேபாளத்தின் பிரதிக், கொரியாவின் லீ ஜங்மோக், விகாஸ் குலேரியா, நமன் பட்நாகா் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

