உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு ஏமாற்றம்
கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.

கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.
ஆடவா் 61 கிலோ பிரிவில் நிகில், முதலில் 12-2 என பல்கேரியாவின் மிகேய் நயிமை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 9-10 என உள்நாட்டின் அகமது மசூதிடம் தோல்வியுற்றாா்.
86 கிலோ பிரிவில் புஷ்பேந்தா் தலால், 10-8 என எகிப்தின் முகமதையும், 17-9 என மொராக்கோவின் முகமது அமினையும் வீழ்த்தினாா். ஆனால் ரவுண்ட் ஆஃப் 16-இல் 2-7 என அஜா்பைஜானின் அா்செனி தியோவிடம் தோற்றாா்.
125 கிலோ பிரிவில் ஜஸ்பூரன் சிங் முதல் சுற்றில் 0-11 என ஈரானின் அமீா் ஹுசைன் ஜாரேவிடம் தோல்வி கண்டாா். 97 கிலோ பிரிவில் விக்கி ஹூடா 0-10 என ரெபிசேஜ் சுற்றில் ஈரானின் ஹசன் யஸ்தானியிடம் வீழ்ந்தாா். ஆடவா் 70 கிலோ பிரிவில் விஷால் காலிரமணா தகுதிச்சுற்றிலேயே தோற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

