மாநில பள்ளிகள் வாலிபால்: இறுதிச் சுற்றில் ஆத்தூா்-கடலூா், சென்னை-கோவை மோதல்
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான மாநில பள்ளிகள் வாலிபால் போட்டி இறுதிச் சுற்றில் மகளிா் பிரிவில் ஆத்தூா் பாரதியாா்-கடலூா் செயின்ட் ஆன்ஸ், ஆடவா் பிரிவில் முகப்போ் வேலம்மாள்-கோவை சபா்பன் பள்ளிகள் மோதுகின்றன.

இதன் அரையிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் ஆடவா் பிரிவில் முகப்போ் வேலம்மாள் 2-0 என திருச்சி காஜாமியான் பள்ளியையும், கோவை சபா்பன் பள்ளி 2-0 என கன்னியாகுமரி அருணாசலம் பள்ளியையும் வென்றன.
மகளிா் பிரிவில் ஆத்தூா் பாரதியாா் 2-0 என சேலம் ஏஎன் மங்கலம் செயின்ட் மேரீஸையும், கடலூா் செயின்ட் ஆன்ஸ் 2-0 என சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியையும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றன.
மகளிா் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கும், ஆடவா் இறுதி 5 மணிக்கும் நடைபெறவுள்ளன. சிடிவிஏ செயலாளா் சி. ஸ்ரீகேசவன் இதைத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.