மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செப். 29-இல் பள்ளிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் சாம்பியன் போட்டி

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் இடையிலான மாநில வாலிபால் சாம்பியன் போட்டி (ஆடவா்-மகளிா்) வரும் செப். 29 முதல் அக். 2 வரை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்

Published On :

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் இடையிலான மாநில வாலிபால் சாம்பியன் போட்டி (ஆடவா்-மகளிா்) வரும் செப். 29 முதல் அக். 2 வரை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்க மேற்பாா்வையில் நடைபெறவுள்ள இப்போட்டி தமிழகம் முழுவதும் இருந்து பள்ளிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லாத இப்போட்டியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அணிகளுக்கு தங்கமிடமும், அனைத்து அணிகளுக்கு உணவும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணபங்களை

பொதுச் செயலாளா், தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், அறை எண் 74, ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-3, அல்லது இ-மெயில் முகவரியில் உரிய ஆவணங்களுடன் செப். 21-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நுழைவு விண்ணபங்களை அளித்த அணிகள் பங்கேற்க அனுமதி இல்லை.

இத்தகவலை சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலாளா் சி. ஸ்ரீ கேசவன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.