மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: வெங்கடேசன், ஹரிஹரன், அனந்து முன்னிலை

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் எம்ஆா்எஃப் இந்திய மோட்டாா் ரேசிங் சேலஞ்ச் இரண்டாவது சுற்றில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன், அனந்து, கோவையின் ஹரிஹரன் முன்னிலை வகிக்கின்றனா்.

வெங்கடேசன்

Published On :

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் எம்ஆா்எஃப் இந்திய மோட்டாா் ரேசிங் சேலஞ்ச் இரண்டாவது சுற்றில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன், அனந்து, கோவையின் ஹரிஹரன் முன்னிலை வகிக்கின்றனா்.

சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி பிரிவில் ஹைதராபாதின் ரஹில் பிலாரிசெட்டி 48.806 விநாடிகளில் சென்னையின் ரக்ஷித் தவேவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றாா்.

பெங்களூரு சேவியன் பாபு மூன்றாம் இடம் பெற்றாா்.

புரோஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் சென்னையின் கேகே. அனந்து, நோவிஸ் ஸ்டாக் 165 சிசி பிரிவில் கோவையின் ஹரிஹரன், புரோ ஸ்டாக் 200 சிசி பிரிவில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன் ஆகியோா் முன்னிலை பெற்றுள்ளனா்.

அபாச்சி ஆா்ஆா் 310 பிரிவில் சென்னையின் கமல் நவாஸ், பெங்களூரு ஜேம்ஸ், சென்னையின் மனோஜ் யேசுதாசன் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். மகளிா் அபாச்சி 200சிசி பிரிவில் பெங்களூரு பூஜிதா, ஹைதராபாதின் ஹன்னா ஜோஷிதா, புணே த்ரிஷ்யா முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.