தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய குத்துச்சண்டை வீரர்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் அன்குஷ் பாங்கல் குறித்து...

Indian boxer Ankush Panghal

இந்திய குத்துச்சண்டை வீரர் அன்குஷ் பாங்கல் - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அன்குஷ் பாங்கல் அரையிறுதியில் உலக சாம்பியனை 4-1 என வீழ்த்தி இறுதிப் போடிக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆடவருக்கான அரையிறுதியில் 80 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் அன்குஷ் பாங்கல் - உஸ்பெகிஸ்தான் ஃபஸ்லித்தின் எர்கின்போயேவ் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் 21 வயதான ஹரியாணாவைச் சேர்ந்த அன்குஷ் பாங்கல் 4-1 என வென்றார். நான்கு நடுவர்கள் இந்திய வீரருக்கு ஆதரவான மதிப்பெண்களையும் ஒரு நடுவர் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு ஆதரவாகவும் மதிப்பெண்களை வழங்கினார்.

இந்த உஸ்பெகிஸ்தான் வீரர் 2025ல் 75 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள அன்குஷ் பாங்கல் தங்கம் அல்லது வெள்ளி வெல்லுவார். இதன்மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்லும் நபராக சாதனை படைக்கவிருக்கிறார்.

இறுதிப் போட்டி அக்.2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனை சோனி தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கலாம். இதுவரை இந்திய அணி 48 பதக்கங்களை வென்றுள்ளன.

Summary

Asian Games 2026 Ankush Panghal beat Uzbekistan’s reigning world champion Fazliddin Erkinboev in semifinals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.