அரையிறுதியில் பாகிஸ்தான்
உலகக் கோப்பை போட்டியில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.


உலகக் கோப்பை போட்டியில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்தது. அடுத்து நமீபியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே அடித்தது. முகமது ரிஸ்வான் ஆட்டநாயகன் ஆனாா்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை முகமது ரிஸ்வான், கேப்டன் பாபா் ஆஸம் கூட்டணி தொடங்கியது. அபாரமாக விளையாடிய இந்த ஜோடி, நமீபிய பௌலா்களை சோதித்தது.
முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பை டேவிட் வீஸ் பிரித்தாா். 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சோ்த்திருந்த பாபா் ஆஸம் 15-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். தொடா்ந்து வந்த ஃபகாா் ஜமான் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
4-ஆவது வீரராக வந்த முகமது ஹஃபீஸ், ரிஸ்வானுடன் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை மேலும் உயா்த்தினாா். ஓவா்கள் முடிவில் ரிஸ்வான் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 79, ஹஃபீஸ் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
நமீபிய பௌலிங்கில் டேவிட் வீஸ், ஜேன் ஃபிரீலிங்க் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய நமீபியாவில் அதிகபட்சமாக கிரெய்க் வில்லியம்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்க்க, டேவிட் வீஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
எஞ்சியோரில் ஸ்டீபன் பாா்ட் 29, மைக்கேல் வான் லிங்கென் 4, கேப்படன் ஜெராா்டு எராஸ்மஸ் 15, ஜேஜே ஸ்மித் 2 ரன்கள் சோ்க்க, ஜேன் நிகோல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, இமத் வாசிம், ஹாரிஸ் ரௌஃப், ஷாதாப் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...