டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டி-20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 4:02 pm

DIN

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர். 

ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரத்துலாஹ் ஜாஜை, முகமது ஷஜாத் ஆகியோர் களமிறங்கினர். ஹசரத்துலாஹ் ஜாஜை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முகமது ஷஜாதும் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. 

இந்த நிலையில் களம்கண்ட கேப்டன் முகமது நபியும், குல்பதின் நைப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி சரிவிலிருந்து மீண்டது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. முகமது நபி,  குல்பதின் நைப் தலா 35 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.