ஸாம்பா சுழலில் சுருண்ட வங்கதேசம்: 7 ஓவரில் வென்று ஆஸ்திரேலியா அபாரம்

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸாம்பா சுழலில் சுருண்ட வங்கதேசம்: 7 ஓவரில் வென்று ஆஸ்திரேலியா அபாரம்


வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

வங்கதேச அணி ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே சரிவைச் சந்தித்தது. லிட்டன் தாஸ் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பேட்டர்களும் எவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், மேக்ஸ்வெல் டாப் ஆர்டரை காலி செய்ய, ஆடம் ஸாம்பா தனது சுழலில் நடுவரிசை பேட்டர்களை காலி செய்தார். 

அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 19 ரன்களும், கேப்டன் மஹமதுல்லா 16 ரன்களும், நைம் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்டர்கள் 10 ரன்களைக்கூடத் தொடவில்லை.

ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நெட் ரன் ரேட்டைக் கணக்கில் கொண்டு அதிரடி காட்டியது. டேவிட் வார்னர் 3 பவுண்டரிகள் விளாசி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பிஞ்ச் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்த மிட்செல் மார்ஷ் 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது ஆஸ்திரேலியா.

குரூப் 1:

இங்கிலாந்து: 8 புள்ளிகள்; நெட் ரன் ரேட்: +3.183 
ஆஸ்திரேலியா: 6 புள்ளிகள்; நெட் ரன் ரேட்: +1.031
தென் ஆப்பிரிக்கா: 6 புள்ளிகள்; நெட் ரன் ரேட்: +0.742

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com