நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவைக் காப்பாற்றுமா ஆப்கானிஸ்தான்?

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதிக் கனவை ஆப்கானிஸ்தான் நனவாக்குமா என்ற எதிர்பார்ப்பில் நியூசிலாந்து ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :6 நவம்பர் 2021, 3:03 pm

DIN


டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதிக் கனவை ஆப்கானிஸ்தான் நனவாக்குமா என்ற எதிர்பார்ப்பில் நியூசிலாந்து ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் குரூப் 2-வில் 2-வது அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து 6 புள்ளிகளுடனும், இந்தியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி திங்கள்கிழமை நமீபியாவை எதிர்கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால், இவ்விரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும். இந்த சூழலில் நமீபியாவை வீழ்த்தினால் இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழையலாம்.

இந்திய அணிக்கு இதிலுள்ள சாதகமான விஷயம், கடைசி ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது. இதனால், நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தேவையான நெட் ரன் ரேட்டுக்கு நமீபியா ஆட்டத்தில் இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிடும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவைக் காப்பாற்றுமா ஆப்கானிஸ்தான்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.