ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விராட் கோலியைக் கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நேரமிது. 

News image
Updated On :8 நவம்பர் 2021, 8:20 am

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நேரமிது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வியாழன் அன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி. புதன் அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

பதிலாக, இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரையிறுதிக்குத் தகுதி பெறாத இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள்.

2012, மார்ச் 20 அன்று கோலி ஒரு ட்வீட்டை வெளியிட்டார். நாளை வீட்டுக்குத் திரும்புகிறேன். மனசே சரியில்லை இது என அவர் எழுதியிருந்ததை பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் தற்போது பகிர்ந்து, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் அவர் நாட்டுக்குத் திரும்புவதை முன்வைத்துக் கேலி செய்துள்ளார்கள்.

உலகக் கோப்பைப் போட்டியுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவுடன் இன்று மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.