உலகக் கோப்பையில் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவாரா? ரோஹித் முக்கியத் தகவல்

டி20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் ஹார்திக் பாண்டியா பந்துவீச தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தின்போது
ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தின்போது


டி20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் ஹார்திக் பாண்டியா பந்துவீச தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸின்போது ஹார்திக் பாண்டியா பந்துவீசுவது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், "இந்திய அணிக்கு 6-வது பந்துவீச்சாளர் தேவை. ஹார்திக் பாண்டியா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால், அவர் பந்துவீச சற்று நேரம் எடுக்கும். அவர் இன்னும் பந்துவீச தொடங்கவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு தயாராகிவிட வேண்டும்.

இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களிடம் தரம் உள்ளது. 6-வது பந்துவீச்சாளர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பேட்டிங் வரிசையிலும் கூடுதலாக சிலவற்றை உறுதி செய்ய வேண்டும். அவை அனைத்தையும் இன்று பரிசோதிக்கவுள்ளோம்" என்றார் ரோஹித்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com