தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எங்கள் கோபம் நியூசிலாந்து மீதுதான், இந்தியா மீது அல்ல: சோயிப் அக்தர்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும்...

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:02 am

DIN

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீதுதான் எங்களுக்குக் கோபம் உள்ளது, இந்தியா மீது அல்ல என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி.  எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இதை முன்னிட்டு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

எங்களுடைய உண்மையான கோபம் நியூசிலாந்து மீதுதான். அவர்களைத் தோற்கடிக்க விரும்புகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். உங்களுடைய தொலைக்காட்சி ஊழியர்கள் இருப்பார்கள். அதனால் இதில் தோற்றால் எங்களுக்குப் பிரச்னை இல்லை. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்துவிட்டால் மிகப்பெரிய வீரர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும். ஆட்டத்தில் பாகிஸ்தானை விடவும் இந்தியா நிலைமையை நன்குக் கையாண்டால் நல்லது. ஒருவேளை பாகிஸ்தான் ஆச்சர்யப்படுத்தினால் என்ன நடக்கும் எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.