நான் சரியாக விளையாடுவதில்லையா?: சிரிக்கும் டேவிட் வார்னர்

நான் சரியாக விளையாடுவதில்லையா?: சிரிக்கும் டேவிட் வார்னர்

சமீபகாலமாக அதிக ஆட்டங்களில் விளையாடாததால் அதிக ரன்கள் எடுக்கவில்லை என...

சமீபகாலமாக அதிக ஆட்டங்களில் விளையாடாததால் அதிக ரன்கள் எடுக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

துபையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 17 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வென்றது. 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாகப் பந்துவீசிய ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா ஆட்ட நாயகன் ஆனாா். ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர், 42 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களில் 0,1 என மோசமாக விளையாடினார். இதனால் அவருடைய பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் இலங்கை ஆட்டத்துக்குப் பிறகு டேவிட் வார்னர் கூறியதாவது:

சமீபகாலமாக நான் சரியாக விளையாடாமல் இருப்பதாக மக்கள் கூறுவது எனக்கு வேடிக்கையாக உள்ளது. இது பற்றி நான் சிரித்துக்கொள்வேன். சமீபகாலமாக நான் அதிக ஆட்டங்களில் விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் விளையாடினேன். பயிற்சி ஆட்டங்களைப் பயிற்சி ஆட்டங்களாகவே பார்க்க வேண்டும். எனவே நான் ரன்கள் எடுக்காதது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆடுகளத்துக்குச் சென்று நன்றாக விளையாட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம். என்னுடைய ஆட்டத்தினால் விமர்சகர்களுக்குப் பதில் அளித்துள்ளேனா? நிச்சயமாகக் கிடையாது. விளையாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எப்போதும் நம்பிக்கையுடன் புன்னகையுடன் சவாலை எதிர்கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com