வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் 

டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் 

டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா இரு மாற்றங்கள். வங்கதேச அணியில் செளம்யா சர்காரும் டஸ்கினும் சேர்க்கப்பட்டனர். மே.இ. தீவுகள் அணியில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டுள்ளார். ராஸ்டன் சேஸ் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். ஹேடன் வால்ஷுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பிடித்தார்.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் கெயில்  4, எவின் லெவிஸ் 6 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் வந்தவர்களில் ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் மட்டுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சேஸ் 39, நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிஸூர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், சோரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 143 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நயீம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். அந்த இருவரும் நல்ல துவக்கம் அளிக்கவில்லை. ஷகிப் அல் ஹசன் 9, நயீம் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ் மட்டும் பொறுப்பறிந்து விளையாடினார். அவர் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் சௌமியா சர்க்கார் 17, முஸ்தபிஸூர்  ரஹிம் 8 என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் மஹ்முதுல்லாஹ் மட்டும் வங்கதேச அணிக்காக போராடினார். அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 மட்டுமே எடுத்த வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com