உலகக் கோப்பையுடன் தில்லி புறப்பட்டது இந்திய அணி!

ஜூலை 4 அதிகாலை தில்லி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் ஏறும் இந்திய வீரர்கள்(படம்: எக்ஸ்)
விமானத்தில் ஏறும் இந்திய வீரர்கள்(படம்: எக்ஸ்)

பார்படாஸில் இருந்து இந்திய அணியினர் புதுதில்லிக்கு தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டனர். இந்த விமானம் நாளை(ஜூலை 4) அதிகாலை தில்லி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய வீரர்களை வரவேற்க ரசிகர்கள் தயாரான நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வீரர்கள் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பார்படாஸில் இருந்து நியூயார்க் வழியாக தில்லி வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது வானிலை சீரானதை தொடர்ந்து, பிசிசிஐயின் ஏற்பாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தனி விமானம் மூலம் பார்படாஸில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் இந்திய வீரர்கள், உதவி அலுவலர்கள் உள்பட 70 பேரும், பார்படாஸில் சிக்கிக் கொண்ட சில பத்திரிகையாளர்களும் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை அதிகாலை தில்லி வரும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர். தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்ட சாலை பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com