கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டி20 உலகக்கோப்பை- சூப்பர் ஓவரில் நமீபியா த்ரில் வெற்றி

News image

Photo Courtesy| AFP

Updated On :3 ஜூன் 2024, 5:55 am

DIN

டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 3ஆவது லீக் ஆட்டம் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நமீபியா-ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய நமீயாவுக்கு ஓமன் அணியின் பந்துவீச்சாளர்களும் சவால் அளித்தனர். நமீபியா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் ஆட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 21 ரன்கள் எடுத்தது. பின்னர் 22 ரன்களை துரத்திய ஓமன் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சூப்பர் ஓவரில் நமீபியா அணி த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 3ஆவது ஆட்டமே சூப்பர் ஓவர் வரை சென்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.