பாகிஸ்தானுக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபுளோரிடாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 32 ரன்களுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேரெத் டெலானி 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜோஷ்வா லிட்டில் 22 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகின் அஃப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...