ஹார்திக் பாண்டியா அதிரடி; வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியாபடம் | AP
Updated on
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

ஹார்திக் பாண்டியா
உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனையை நோக்கி டேவிட் வார்னர்!

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தியது.

விராட் கோலி
விராட் கோலிபடம் | AP

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 36 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷிவம் துபே 3 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். அவர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஹார்திக் பாண்டியா
கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து உலகக் கோப்பையில் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை!

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். வங்கதேசம் தரப்பில் தன்சித் ஹாசன் ஷகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com