செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்; இன்றும் தொடருமா?

டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News image

சூர்யகுமார் யாதவ்

படம் | AP

Updated On :29 ஜூன் 2024, 1:39 pm

DIN

டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது. இரு அணிகளும் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் தொடர்ச்சியாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றிலும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் 31 ரன்கள் மற்றும் 47 ரன்கள் முறையே எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் சூர்யகுமார் யாதவ்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 196 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 32.66 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 137.06 ஆகவும் உள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் இரண்டு அரைசதங்கள் எடுத்துள்ளார்.

டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 343 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரது சராசரி 68.60 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 177.2 ஆகவும் உள்ளது. அந்த அணிக்கு எதிராக ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக அவரது சிறந்த ஸ்கோர் ஸ்கோர் 100 ஆகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு உதவுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.