உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ் ஆண்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக மொத்தம் 719 காளைகள் களமிறக்கப்பட்டன.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு அதைத்தொடர்ந்து போட்டிக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளைப் பிடித்த விராட்டிபத்து கண்ணன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் ஜீவா!

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஹைதராபாத்: கைக்குழந்தையுடன் 6-வது மாடியிலிருந்து குதித்த பெண் பலி; உயிர்பிழைத்த குழந்தை!

ஜல்லி கற்களை ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு! | Tambaram
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



