வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 'விளக்கு' விருது !

சென்னை, டிச.23: தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு "விளக்கு' இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான "விளக்கு' புதுமைப்பித்தன் நி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:15 pm IST

சென்னை, டிச.23: தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு "விளக்கு' இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான "விளக்கு' புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெüரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதில் ரூ.40 ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். வே.சபாநாயகம், ராமசாமி, சிபிச்செல்வன் அடங்கிய குழு இந்த விருதிற்காக கவிஞர் விக்ரமாதித்யனைத் தேர்ந்து எடுத்துள்ளது.

62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் "ஆகாசம் நீல நிறம்', "ஊரும் காலம்', "உள்வாங்கும் உலகம்' உள்ளிட்ட 16 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், 7 கட்டுரைத் தொகுப்புகளும் அவரின் பங்களிப்புகள். கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு பத்திரிகையாளரும் கூட. தாய், தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது, விசிட்டர் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். மனைவியும் பிரேம்சந்த், சந்தோஷ் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

தமிழ் படைப்பாளிகளான சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, தேவதேவன் முதலானோருக்கு கடந்த ஆண்டுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.