பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

"பல் மருத்துவம் பலருக்கு எட்டாக்கனி'

சென்னை, ஜூலை 3: தமிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.  இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 13,937 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:10 am

ஜே.ரங்கராஜன்

சென்னை, ஜூலை 3: தமிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

 இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 13,937 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்குச் சேர்த்து ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட் - ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி உள்ளது.

 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இந்த ஆண்டு முதன்முறையாக வரும் 6-ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். படிப்புடன் சேர்த்து அரசு பி.டி.எஸ்., சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 85 அரசு இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. அரசு பி.டி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2,000 உள்பட மொத்தம் ரூ.9,360 செலுத்தினால் போதும்.

 இதனால் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், பி.டி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 847 அரசு ஒதுக்கீட்டு இடங்களில்தான் சேர முடியும்.

 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். ஒரு இடத்துக்கு கடந்த ஆண்டு கட்டணமாக ரூ.75,000-த்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு நிர்ணயித்தது.

 வரும் 6-ம் தேதி கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையிலும்கூட, இந்த ஆண்டுக்கான கட்டணத்தை அரசு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய நீதிபதி குழு இதுவரை நிர்ணயிக்கவில்லை.

 கட்டணம் அதிகரிக்குமா? கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பில் சேர அதிக மாணவர்கள் விரும்புவதால் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். ஆண்டுக் கட்டணம் ரூ.75,000-த்தை உயர்த்தித் தருமாறு சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.