மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

செஞ்சிக்கு ரயில்: கனவு திட்டம் நிறைவேறுமா?

செஞ்சி, அக். 2: செஞ்சி வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், நிதி ஒதுக்காததாலும் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.   திண்டிவனம் - திருவண்ணாமலை இடை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:01 pm

ஜெ.பாபு

செஞ்சி, அக். 2: செஞ்சி வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், நிதி ஒதுக்காததாலும் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

  திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே செஞ்சி வழியாக புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 15.10.2008ல் செஞ்சியில் நடைபெற்றது. விழாவில் பேசிய அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு "பணி விரைந்து முடிக்கப்படும்' என்றார்.

  ஆனால் ரயில் செல்லும் பாதையில் உள்ள ஒரு சென்ட் தனியார் நிலத்தைக்கூட அரசு இதுவரை கையகப்படுத்தவில்லை.

  திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதையின் மொத்த நீளம் 71.33 கி.மீ. ரூ.227.40 கோடியில் 9 ரயில் நிலையங்கள், 8 பெரிய பாலங்கள், 82 சிறிய பாலங்கள், 47 லெவல் கிராசிங்குகள், 1 சாலை மேம்பாலம், 4 சுரங்கப் பாலங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட வேண்டும்.

  தற்போது வல்லம் தொண்டி ஆற்றில் ஒரு பாலமும், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் ஒரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரயில் செல்லும் பாதையில் உள்ள தனியார் நிலங்களை ரயில்வே துறையினர் அளந்து வைத்துள்ளனர்.

  தனியார் நிலங்களை கையகப்படுத்தித் தருமாறு விழுப்புரம் மாவட்ட வருவாய் துறையினரிடம் ரயில்வே துறையினர் கோரியுள்ளதாகவும், ஆனால் நிலங்களை அளந்து கையகப்படுத்த வருவாய்த் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் சங்கரனிடம் கேட்டபோது, "தனியார் வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மூலம் தனியாக ஒரு பணியாளர் குழுவை அமைக்க உள்ளோம்' என்று தெரிவித்தார்.

  மேலும் இதற்கான நிதி இந்த ஆண்டு இதுவரை ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. இதன் காரணமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடைபெறவில்லை.

  ரயில் வசதி கிடைத்தால் புகழ்பெற்ற கோட்டை உள்ள செஞ்சி நகரம் மேலும் சிறப்புகளைப் பெறும். மேலும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவும், மேல்மலையனூர் கோயிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா உள்ளிட்டவற்றுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் ரயில் திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ஆரணி தொகுதி எம்பியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி, பணி தொய்வில்லாமல் நடைபெறவும், திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தந்து செஞ்சி நகர மக்களின் ரயில் கனவு திட்டத்தை நனவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.