மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

"விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் விற்பனைக் கூடம்'

செஞ்சி, அக். 9: செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் மிக அதிக வருமானமும், அதிக அளவில் விற்பனை மற்றும் கொள்ளுமுதல் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:18 pm

ஜெ.பாபு

செஞ்சி, அக். 9: செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மிக அதிக வருமானமும், அதிக அளவில் விற்பனை மற்றும் கொள்ளுமுதல் செய்யக்கூடிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடமும் ஒன்று. இங்கு அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் உள்ளது.

இதனால் இங்கு வரும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இங்கு தினமும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை மணிலா மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன.

இது தவிர கம்பு, கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும் விற்பனைக்கு வருகின்றன.

இவை அனைத்துக்கும் சாக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. விற்பனைக் கூடத்தில் 3 ஆயிரம் சாக்குகளே உள்ளன.

இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மாற்றுவதற்கு சாக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு கால விரையம் ஏற்படுகிறது. உடனடியாக அரசு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சாக்குகளை அளிக்க வேண்டும். மேலும் விளைப் பொருள்களை விற்றவுடன் அலைக்கழிக்கப்படாமல் உடனடியாக பணம் கிடைப்பதற்கும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகின் றனர்.

பயனற்ற கொட்டகை

விவசாயிகள் ஓட்டி வரும் மாடுகளை கட்டுவதற்கான கொட்டகை பயனற்று உள்ளது. விவசாயிகளுக்கு உணவு விடுதி இல்லை. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை திறந்த வெளி களத்தில் வைத்திருப்பதால் மழை பெய்தால் நனைந்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தற்போது இங்கு ஒரு பகுதியில் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கழிப்பிட அறைகள்

கழிப்பிட அறைகள் மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் உள்ளே செல்ல முடியாதவாறு உள்ளது. விவசாயிகள் வேறு வழியில்லாமல் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

பணியாளர் பற்றாக்குறை

செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 25 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் 9 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் 7 பேர் மாற்றுப் பணியில் உள்ளனர். மேலும் 8 பேர் தினக்கூலியாக மாதம் ரூ.1800-க்கு உள்ளனர். இவர்கள் 10 வருடமாக பணியில் இருந்தும் நிரந்தரம் செய்யப்படவில்லை.

மின் வசதி

மணிலா கொட்டகையில் மின்சார வசதி இல்லாமல் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்கும் அறையில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

தங்கும் அறையில் தண்ணீர், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட ஏதும் இல்லை. இதனால் இங்கு தங்குவதை விவசாயிகள் புறக்கணித்து வருகின்றனர்.

இலவச மருத்துவமனை

விவசாயிகளுக்கான இலவச மருத்துவமனை உள்ளது. இதில் 2 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் என்று உள்ளது. ஆனால் வியாழக்கிழமை (அக்டோபர் 8) அன்று மருத்துவர் வரவில்லை. விவசாயிகளிடம் மருத்துவமனையைப் பற்றி கேட்ட போது ""நாங்கள் யாரும் மருத்துவமனையை பயன்படுத்துவது இல்லை'' என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.